திருநீலகண்டேஸ்வரர் திருக்கோயில் Thiruneelakandeshwarar Temple
தளவாய்பட்டினம், தாராபுரம், திருப்பூர் மாவட்டம் Dalavoipattinam, Dharapuram, Tiruppur District
ஒவ்வொரு வியாழக்கிழமையும் மேதா தட்சிணாமூர்த்தியை வழிபட பக்தர்கள் கூடும் பழமை வாய்ந்த சிவாலயம். An ancient Siva temple where devotees gather every Thursday to worship Lord Medha Dakshinamoorthy.
அருள்மிகு அகிலாண்டேஸ்வரி உடனுறை திருநீலகண்டேஸ்வரர் திருக்கோயில் Arulmigu Sri Akilandeswari Samedha Sri Thiruneelakandeshwarar Temple
ஒவ்வொரு வியாழக்கிழமையும் குரு வழிபாடு Guru worship, every Thursday
இத்திருக்கோயிலில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் குரு பகவானுக்கு விசேஷ அபிஷேகம், முல்லை மலர் அர்ச்சனை மற்றும் விசேஷ அலங்கார வழிபாடுகள் நடைபெறுகின்றன. ஞானம், கல்வி வெற்றி, குரு தோஷம் உள்ளிட்ட கிரகத் தடைகளிலிருந்து விடுபடவும் வேண்டி பக்தர்கள் வருகின்றனர்.
Every Thursday the temple holds special abhishekam, jasmine archanai and alankaram for Lord Medha Dakshinamoorthy (Guru Bhagavan). Devotees come to pray for wisdom, success in studies, and relief from Guru dosha and other planetary difficulties.
வியாழக்கிழமை திறந்திருக்கும் நேரம்: காலை 5:00 முதல் மதியம் 12:00 வரை; பிற்பகல் 3:00 முதல் மாலை 6:00 வரை. Open on Thursdays: 5:00 am to 12:00 noon, and 3:00 pm to 6:00 pm.
16 வார நெய் தீப வழிபாடு The 16-week ghee lamp vazhipadu
குறிப்பாக, இங்கு நடைபெறும் “16 வார வியாழக்கிழமை நெய் தீப வழிபாடு” மிகவும் பிரசித்தி பெற்றது. பக்தர்கள் சங்கல்பம் செய்துகொண்டு, தொடர்ந்து 16 வியாழக்கிழமைகள் குரு பகவானுக்கு நெய் தீபமேற்றி மனமுருகி வேண்டிக்கொள்கின்றனர். இந்த வழிபாட்டை முடித்த பலர் தங்கள் வேண்டுதல் நிறைவேறியதாகப் பகிர்ந்துகொள்கின்றனர்.
This is the temple’s best-known prayer. Devotees take a sankalpam and light ghee lamps before Lord Dakshinamoorthy on 16 consecutive Thursdays. Many who complete the 16 weeks have shared that their prayers were answered.
- திருமணத் தடை நீங்கDelays in marriage (Vivaha prapthi)
- குழந்தைப் பேறு வேண்டிA child (Santhana bhagyam)
- வேலை, வியாபாரத் தடைகள் நீங்கObstacles in career and business
வழிபாட்டைத் தொடங்கும் முறையை அறிய கோயிலை அழைக்கவும்: +91 89032 89272
To learn how to begin, call the temple: +91 89032 89272
உங்கள் 16 வியாழக்கிழமைகளைக் கணக்கிடுங்கள் Keep count of your 16 Thursdays
ஒவ்வொரு வியாழன் தீபம் ஏற்றிய பின் அந்த விளக்கைத் தொடுங்கள். After each Thursday’s lamp, tap that lamp to light it here.
இந்தக் கணக்கு இந்த தொலைபேசியில் மட்டும் சேமிக்கப்படும். கோயிலுக்கு அனுப்பப்படாது.Saved on this phone only. It is not sent to the temple.
திருக்கோயில் அறிமுகம் About the temple
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், தளவாய்பட்டினத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு அகிலாண்டேஸ்வரி உடனுறை திருநீலகண்டேஸ்வரர் திருக்கோயில் (தளவாய் குரு ஸ்தலம்) உங்களை அன்புடன் வரவேற்கிறது. ஈசனின் அருளோடு, பிரசித்தி பெற்ற தென்திசை கடவுளாம் மேதா தட்சிணாமூர்த்தி (குரு பகவான்) அருள்பாலிக்கும் புண்ணிய க்ஷேத்திரம் இதுவாகும்.
Arulmigu Sri Akilandeswari Samedha Sri Thiruneelakandeshwarar Temple is an ancient Siva temple at Dalavoipattinam in Dharapuram Taluk, Tiruppur District. It is regarded as a parihara sthalam and is especially revered for its shrine of Lord Medha Dakshinamoorthy (Guru Bhagavan).
- மூலவர்Main deities
- திருநீலகண்டேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி அம்மன்Lord Thiruneelakandeshwarar (Siva) and Goddess Akilandeswari
- சிறப்புச் சன்னதிSpecial shrine
- மேதா தட்சிணாமூர்த்தி (குரு பகவான்)Lord Medha Dakshinamoorthy (Guru Bhagavan)
- வாராந்திர சிறப்புEvery Thursday
- குரு அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனைGuru abhishekam, alankaram and archanai
- சிறப்பு வழிபாடுSpecial prayer
- 16 வார வியாழன் நெய் தீப பிரார்த்தனை16-week Thursday ghee lamp prayer
- அமைவிடம்Location
- தாராபுரம் – பழனி வழித்தடம் அருகில்Near the Dharapuram to Palani route
கல்வெட்டுகள் கூறும் தளவாய்ப்பட்டினம் Dalavoipattinam in stone inscriptions
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுத் தொகுப்பில் தளவாய்ப்பட்டினத்தின் நான்கு தமிழ்க் கல்வெட்டுகள் பதிவாகியுள்ளன. இவை 12 முதல் 14-ஆம் நூற்றாண்டு வரை இவ்வூர்க் கோயில்களுக்கு நிலமும் விளக்கும் கொடையாக வழங்கப்பட்டதைக் காட்டுகின்றன. அதாவது, எழுநூறு ஆண்டுகளுக்கும் மேலாக இவ்வூர் வழிபாட்டுக்கு உரிய இடமாக இருந்து வருகிறது.
The Tamil Nadu Department of Archaeology's survey of Tiruppur District records four Tamil inscriptions from Dalavoipattinam. They show gifts of land and lamps to the village's temples between the 12th and early 14th centuries, so worship here goes back more than 700 years.
-
12-ஆம் நூற்றாண்டு12th century
வரதராசப் பெருமாள் கோயில், வாயில் படிக்கால்Varadaraja Perumal temple, doorway step
பாண்டிய மன்னன் வல்லப தேவரின் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்தது. செயங்கொண்ட சோழ விண்ணகர ஆழ்வாருக்கு நிலம் கொடுத்த செய்தியைக் கூறுகிறது. கல்வெட்டுச் சிதைந்துள்ளது.
From the reign of the Pandya king Vallabha Deva. It records a gift of land to the deity Seyangonda Chola Vinnagar Alvar. The inscription is damaged.
-
13-ஆம் நூற்றாண்டு13th century
வரதராசப் பெருமாள் கோயில், வடக்குச் சுவர்Varadaraja Perumal temple, north wall
துண்டுக் கல்வெட்டு. நாயனார் தேவநாயகப் பெருமாளுக்கான கொடையைப் பற்றிய குறிப்புகள் எஞ்சியுள்ளன.
A fragment. The surviving lines refer to a gift for Devanayaka Perumal.
-
கி.பி. 13091309 CE
பிடாரி அம்மன் கோயில், தெற்குக் குமுதம்Pidari Amman temple, southern base moulding
கொங்குப் பாண்டிய மன்னன் சுந்தர பாண்டியனின் 24-ஆம் ஆட்சி ஆண்டு. வீரசோழன் திருமடைவிளாகத்தைச் சேர்ந்த கைக்கோளரான கண்டன் என்பவர், பிடாரி அம்மனுக்குச் சந்தியா தீபம் ஏற்றப் பொன் அளித்த செய்தி. கல்வெட்டுச் சிதைந்துள்ளது.
In the 24th regnal year of the Kongu Pandya king Sundara Pandiyan. A Kaikkolar man named Kandan, of the Veerasolan Thirumadaivilagam settlement, gave gold to keep an evening lamp burning before Pidari Amman. The inscription is damaged.
-
காலம் குறிப்பிடப்படவில்லைDate not recorded
இந்தத் திருக்கோயிலில்In this temple
திருநீலகண்டேசுவரர் கோயில், சண்முகர் சிற்பத்தின் பீடம்Thiruneelakandeshwarar temple, pedestal of the Shanmugar (Murugan) sculpture
துண்டுக் கல்வெட்டு. சண்முகர் சிலையைச் செய்தவரின் பெயர் இதில் உள்ளது.
A fragment that carries the name of the person who made the Shanmugar sculpture.
ஆதாரம்: தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள், பக். 217–220 (தளவாய்ப்பட்டினம்). இவை சிதைந்த துண்டுக் கல்வெட்டுகள்; இக்கல்வெட்டுகளில் இத்திருக்கோயிலின் மூலவர் பெயர் குறிப்பிடப்படவில்லை. Source: Tamil Nadu Department of Archaeology, Tiruppur District inscriptions, pp. 217–220 (Dalavoipattinam). These are damaged fragments. None of them names this temple's main deity.
திருப்பணி: திருக்கோயிலைப் புனரமைப்போம் Thirupani: restoring the temple
இப்புராதன திருக்கோயிலைப் புனரமைத்து மகா கும்பாபிஷேகம் நடத்திட திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. கருவறை, கோபுரம், மண்டபங்கள் ஆகியவற்றைப் புதுப்பிக்கும் இப்பணியில் பக்தர்கள் அனைவரும் வியாழக்கிழமை தோறும் நடைபெறும் பூஜைகளில் பங்கேற்று, தங்களால் இயன்ற கைங்கர்யங்களைச் செய்து இறையருள் பெற வேண்டுகிறோம்.
The temple administration and devotee trust are carrying out Thirupani, the sacred renovation of the sanctum, gopuram and mandapams, in preparation for a Maha Kumbhabhishekam. Devotees are warmly invited to visit, join the Thursday poojas, and contribute whatever they can toward the temple’s revival.
பங்களிக்கHow to contribute
அதிகாரப்பூர்வ நன்கொடை விவரங்கள் அறக்கட்டளை உறுதி செய்தவுடன் இங்கே வெளியிடப்படும். அதுவரை பங்களிக்க விரும்புவோர் கோயிலை அழைக்கவும்: +91 89032 89272
Official donation details will be published here as soon as the trust confirms them. Until then, please call the temple to contribute: +91 89032 89272
பகிருங்கள்Share this page
உங்கள் உறவினர், நண்பர்களுக்கு இந்தப் பக்கத்தை அனுப்புங்கள்.
Send this page to family and friends who may want to help.
வாட்ஸ்அப்பில் பகிரShare on WhatsAppஅறக்கட்டளை: Sri Dhatchinamoorthi Arakattalai Run by Sri Dhatchinamoorthi Arakattalai
கோயில் செய்திகள்Latest from the temple
படங்கள்Photos
வருகைVisit the temple
அருள்மிகு அகிலாண்டேஸ்வரி உடனுறை திருநீலகண்டேஸ்வரர் மற்றும் தட்சிணாமூர்த்தி திருக்கோயில்,தளவாய்பட்டினம், தாராபுரம் வட்டம்,
திருப்பூர் மாவட்டம், தமிழ்நாடு 638672 Arulmigu Sri Akilandeswari Samedha Sri Thiruneelakandeshwarar and Dakshinamoorthy Temple,
Dalavoipattinam, Dharapuram Taluk,
Tiruppur District, Tamil Nadu 638672
திறந்திருக்கும் நேரம்Opening hours
| திங்கள் முதல் புதன்Monday to Wednesday | காலை 8:00 – 11:008:00 am to 11:00 am |
|---|---|
| வியாழன்Thursday | காலை 5:00 – மதியம் 12:00 பிற்பகல் 3:00 – மாலை 6:005:00 am to 12:00 noon 3:00 pm to 6:00 pm |
| வெள்ளி முதல் ஞாயிறுFriday to Sunday | காலை 8:00 – 11:008:00 am to 11:00 am |